ஆகஸ்ட் 2, 3ம் தேதி கொல்லிமலை வல்வில்ஓரி விழா: கலெக்டர் தகவல்
- பத்மநாப சுவாமி கோவிலில் பிரமிக்க வைக்கும் தங்க புதையல்: சுரங்க அறைகளில் தேடல் தொடர்கிறது
- கனிமொழிக்கு ஜாமின் மறுப்பு சரியா? கேள்வி எழுப்புகிறார் ஜஸ்வந்த் சிங்
- உள்ளாட்சி தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து முடிவு: ராமதாஸ்
- ரேஷன் அரிசி கடத்தினால் குண்டர் சட்டம் பாயும் : இதுவரை 29 பேரை " உள்ளே' தள்ளியது போலீஸ்
- ஆளும் கட்சி தொழிற்சங்கத்தின் பெயரில் அரசு கேபிளை முடக்க முயற்சி
- பத்மநாப சுவாமி கோவிலில் பிரமிக்க வைக்கும் தங்க புதையல்: சுரங்க அறைகளில் தேடல் தொடர்கிறது
- நான்.. இனி செல்லாக் காசு!
- அன்னங்கோயில் முகத்துவாரம் ஆழப்படுத்தும் பணி துவங்கியது :30 ஆண்டு கால மீனவர்களின் கனவு நிஜமாகிறது
- பியூட்டி வொர்க்ஸ்-ல் அழகு பராமரிப்பு சேவை
- சீரமைக்கப்படாத ரோடு; தூர் வாராத கண்மாய்கள் : சித்தார்கோட்டை ஊராட்சியில் தொடரும் அவலம்
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2011,01:28 IST
நாமக்கல்: "கொல்லிமலையில், ஆகஸ்ட் 2, 3ம் தேதிகளில் வல்வில் ஓரி விழா நடத்தப்பட உள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்து பேசியதாவது: இந்தாண்டு வல்வில் ஓரி விழா, ஆகஸ்ட் மாதம் 2, 3ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. விழாவுக்கு மக்கள் எளிதில் வரும் வகையில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது. வில்வித்தை உட்பட மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வல்வில் ஓரியின் பெருமையை மாணவ, மாணவியர் அறியும் வகையில், கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தி, பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீஸ் நாய்களின் சாகஸ நிகழ்ச்சிகள், நாய்க் கண்காட்சி, வேளாண்துறை, வருவாய்துறை, சமூகநலத்துறை, வனத்துறை ஆகியவற்றின் பல்துறை பணிவிளக்க கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் சீத்தாலட்சுமி உட்பட அனைத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
