வரலாற்றில் உண்மையாகவே தலையூர் காளி தற்கொலை செய்து கொல்கிறார ?
--
With Regards,
g,mohanprabha
அன்பு உறவினர்களுக்கு வணக்கம்.
பொன்னர் சங்கர் திரைப்படத்தில் நமது சமூகத்தை பற்றி இழிவாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று செய்திகள்
பலவாறாக வந்த வண்ணம் இருந்தது. பல எதிர்ப்புகளுக்கு இடையே படமும் வெளிவந்து ஓடிக் கொண்டுள்ளது.
இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை.தலையூர் காளி மன்னன் மட்டும் போர் களத்தில் தற்கொலை செய்து
கொண்டு இறப்பதாக காட்சி எடுக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதாவது தலையூர் காளியை செல்லாத்தா கவுண்டர், மாந்தியப்பன் ஆகியோரின் தவறான வழிகாட்டுதலின் பேரில் சின்ன மலைகொழுந்தான் குடும்பத்தை கடத்துவது. அருக்காணியை கடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு
தனது பெயரை கெடுத்து கொள்கிறார்.பெரிய மலைக்கொழுந்தன்.செல்லாத்தா கவுண்டர்,மாந்தியப்பன்
தூண்டுதலின் பேரில்தான் தலையூர்காளி வளநாட்டின் மீது படை எடுக்கிறார்.
இவர்கள் சூழ்ச்சி யை போரின்கடைசி நிமிடத்தில் அறிகிறார்.பொன்னரிடம் போரில் சண்டையிட்டு தான் நிராயுதபாணியாக நிற்கும் போது இதற்கெல்லாம் காரணம் மாந்தியப்பன்,செல்லாத்தகவுண்டர் என்பதை உணர்ந்து போரில் தனக்கு பொன்னர் உயிர் பிச்சை அளித்ததை ஏற்காமல் இனிமேல் நான் வாழ மாட்டேன் என்று வாளால் தற்கொலை செய்துகொள்கிறார்.மானம் பெரிது என்று உணர்த்தப்படுகிறது.
இந்த படத்திற்கும் வரலாற்றுக்கும் சிறிதும் பொருத்தம் இல்லாமல் படம் எடுக்கப்பட்டுள்ளது.
பிச்சன் எழுதிய கதை வேறு.முதல்வர் கலைஞர் தன் நூலில் எழுதிய பொன்னர் சங்கர் கதை வேறுவிதமாக உள்ளது.திரைப்படமாக எடுக்கும் போது அதையே வேறுவிதமாக மாற்றி எழுதியுள்ளார்.
இது ஒரு கற்பனையாக திரைப்படத்திற்க்காக எழுதப்பட்ட கதை. வேறு எந்த இடத்திலும் நமது சமூகத்தை
பற்றி இழிவாக எழுதப்படவில்லை.நிறைய செலவு செய்து பிரமாண்டமாக படம் எடுத்திருந்தாலும் இந்தப்படம் ஓடாது.
ஆர்.முத்துசாமி.( 9940701039)
ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கம்.
கோவை.
--
With Regards,
g,mohanprabha